‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. நான்கு பாடல்களையும் இயக்குனர் செல்வராகவனே எழுதியுள்ளார். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவியரசு கண்ணதாசனுக்கு சம்ர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு பாடல் உள்ளது.
இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.