சுவர் இடிந்த நெல்லை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை: அதிர்ச்சித்தகவல்

நெல்லையில் நேற்று சுவர் இடிந்து விபத்துக்குள்ளான பள்ளிக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

நெல்லையில் உள்ள சாஃப்ட்ர் என்ற பள்ளியில் நேற்று கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும் நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கோபத்தில் இருப்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.