shadow

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நடந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு கடினமாக இருந்ததாக கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இயற்பியல் வேதியல் ஆகியவற்றில் தலா 20 கேள்விகள் மட்டுமே எளிதாக இருந்ததாகவும் மற்றபடி அனைத்து கேள்விகளும் யோசித்து எழுதும்படி தான் இருந்தது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்

இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் நீட் தேர்வை முழுமையாக எழுத நேரம் கிடைக்கவில்லை என்றும் மாணவி ஒருவர் கூறியுள்ளார்
கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் உயிரியல் மற்றும் தாவரவியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும் இயற்பியல் வேதியியல் மட்டுமே கடினமாக இருந்ததாகவும் கூறியிருப்பதை பார்க்கும்போது இந்த முறை நீட் தேர்வில் தேர்வு பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது