மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு

 புதிய தேதி அறிவிப்பு!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜுலை 26ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மே 3ஆம் தேதி நடைபெற்று இருக்கும். ஆனால் நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்தவுடன் நீட் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜுலை 26ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தேர்வை எழுதும் மாணவ மாணவிகள் தற்போது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Leave a Reply