இளநிலை மருத்துவ நீட் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இளநிலை மருத்துவர் நீட் தேர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது