உலக அளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

25 லட்சத்தை நெருங்கியதாக  தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் மொத்தம் 24,81,165 பேர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் 792,759 பேர்களும், ஸ்பெயினில் 200,210 பேர்களும், இத்தாலியில் 181,228 பேர்களும், இந்தியாவில் 18,539 பேர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370ஆக உயர்ந்துள்ளது என்பதும் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு 20,852 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவிடம் மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

Leave a Reply