அகதிகள் முகாமில் 200 பேர் பட்டினிச்சாவு? நைஜீரியாவில் நடந்த கொடுமை

அகதிகள் முகாமில் 200 பேர் பட்டினிச்சாவு? நைஜீரியாவில் நடந்த கொடுமை
terrorist attacks in nigeria college
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் போஹாகராம் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் இளம்பெண்களை கடத்தி கற்பழித்தும் வருகிறார்கள். கடந்த 7 வருடமாக அவர்களுடைய அட்டகாசத்தை அடக்க முடியாமல் நைஜீரிய அரசு திணறி வருகிறது.

போஹோகராம் தீவிரவாதிகளால் இதுவரை 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் தொல்லை தாங்க முடியாமல் நைஜீரியா நாட்டில் இருந்து சுமார் 24 ஆயிரம் பேர் தப்பி, அருகில் உள்ள பமா என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.

ஆனால் அங்குள்ள அகதிகளுக்கு உணவு கொண்டு செல்ல தீவிரவாதிகள் தடுப்பதால் இவர்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் 200 பேர் பலியாகி உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 5-ல் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த பகுதிக்கு சர்வதேச மருத்துவ குழு ஒன்று தற்போது சென்றுள்ளது. அவர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply