வீட்டிற்குள் படையெடுத்த 120 பாம்புகள்:

அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகளில் நடமாட்டமில்லாத இருப்பதால் காட்டு விலங்குகள் மற்றும் ஊர்வன ஆகியவை ஊருக்குள் புகுந்து வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிஹெண்ட் மாவட்டத்தில் ஜீவன் சிங் என்பவரது வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் 120 பாம்புகள் வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து அந்த வீட்டிலுள்ள குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாக தூங்கவில்லை என்றும் எப்போது பாம்புகள் படையெடுக்கும் என்பது தெரியாததால் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த வீட்டில் இருந்த அனைத்து பாம்புகளையும் பிடித்து அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதியை தேடி தந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply