நஸ்ரியா கமிஷ்னரிடம் புகார்

நய்யாண்டி திரை படத்தின் நாயகி நஸ்ரியா இன்று பகல் 12 மணி அளவில் எக்மோர் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் விவரம் பின்வருமாறு :

தான் தான் நய்யாண்டி படத்தின் நாயகி என்றும் படம் வரும் 11ம் தேதி ரிலிஸ் ஆவது குறித்து புகார் தெரிவித்திருக்கிறேன். நான் ஒரு கட்டுகோப்பணா முஸ்லிம் மதத்தை சேர்ந்த கேரள குடும்பத்தை சார்ந்தவள். இதுவரை நான் நடித்த தமிழ் மற்றும் மலயாள படங்களிலும் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்மே நடித்துள்ளேன்.

இந்த புகார் எதுகுறித்து என்றால்  நான் நடிக்காத ஆபாசமான கட்சியை ஒரு பாடி டூப் மூலம் நடிக்கவைத்து பாடலுக்கு இடையில் இனைத்திருக்கிறார்கள். இதற்கான எந்த வித முன்னறிவுப்பும் என்னிடம் கேட்கவில்லை. நானே இதனை யூ ட்யூப்பில் ரிலீஸ் ஆனா பிறகுதான் தெரிந்து கொண்டேன். இது குறித்து  இயக்குனர் சற்குணத்திடம் கேட்ட போது அவர் என்னையும் என் குடும்பத்தையும்  மிரட்டுகிறார் . அதுமட்டுமின்றி என் மதத்தினையும் மதிப்பில்லாமல் நடந்து கொள்கிறார். தயாரிப்பாளர்  கதிரேசன் எதற்கும் சரிவர பதில் அளிக்கமறுக்கிறார். அதனால் தான் நான் உங்களுக்கும் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் என் புகாரை தெரிவித்திருக்கிறேன்.

இது போன்ற செயல் எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அதனால் உடனடியாக, நான் சமந்தப்படாத கட்சியனை நீக்குமாறு பட குழுவிற்கு உததரவளியுங்கள். இல்லை என்றால்  படத்தின் ரிலிஸ்சை நிறுத்துங்கள் இது எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்திற்கும், மதத்திற்கும், ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்காகவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.