நயன் தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

நயன் தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தனுஷ் நடித்த கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களையும், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது