எனது படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ்

எனது படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ்

murugadossபிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. ஆனால் இந்த தகவலை முருகதாஸ் மறுத்துள்ளார். முருகதாஸ் தனது டுவிட்டரில் ‘மகேஷ்பாபு நடிப்பில் எனது இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ராகுல்ப்ரித்திசிங் மட்டுமே முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply