நாளை காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றில் ஒன்று உதயநிதி ஸ்டாலினுடன் நயன் தாரா நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம். இந்த படம் தமிழகத்தில் மட்டும் நாளை சுமார் 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

நயன்தாராவின் இரண்டாவது ரிலீஸ் ‘நீ எங்கே நான் அங்கே”. கஹானி திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் படமான இதுவும், நாளை ரிலீஸ் ஆகிறது. காணாமல் போன கணவரை தேடும் கேரக்டரில் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

நயன் தாராவின் மூன்றாவது ரிலீஸ் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸர். பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நடிக்கும் நயன்தாரா படத்தின் டீஸர்  தற்போது தயார் நிலையில் இருக்கிறது. நாளை இந்த படத்தின் டீஸர் வெளிவருவது உறுதி என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் நயன் தாராவின் இரண்டு படங்களும், ஒரு டீஸரும் வெளியாவதால் நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply