தனுஷ் ரசிகர்கள் தனக்கு போனில் மெசேஜ் அனுப்பி திட்டுகிறார்கள் என ஆதங்கத்துடன் கர்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
கர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமாக பாராட்டு பெற்றவர் நட்டி நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது
அவர் தனது டுவிட்டரில் கர்ணன் படத்தில் தன்னுடைய கேரக்டர் கொடுமைப்படுத்துவது குறித்து தனுஷ் ரசிகர்கள் என்னை திட்டி வருகிறார்கள் என்று புலம்பி உள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…🙏🙏🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 11, 2021