shadow

காந்தியின் நினைவு தினத்தில் கோட்ஸே புத்தக வெளியீடா? கோவாவில் பரபரப்பு

godse bookமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட தினமான இன்று, அவரை கொலை செய்த நாதுராம் கோட்ஸே பற்றிய புத்தகம் வெளியீட்டு விழா ஒன்று கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு  கோவா ஃபார்வார்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இன்று இந்த விழா நடக்குமா? என்பது குறித்து இருவேறான கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இதுகுறித்து கோவா தலைநகர் பனாஜியில் கோவா ஃபார்வார்டு கட்சியின் செயலாளர் மோகன்தாஸ் லோலியங்கர், செய்தியாளரிடம் கூறியதாவது: எழுத்தாளர் அனூப் அசோக் சர்தேசாய் எழுதியுள்ள “நாதுராம் கோட்ஸே- தி ஸ்டோரி ஆஃப் அன் அஸ்ஸாஸின்’ (‘Nathuram Godse – The Story of an Assassin)என்ற புத்தகத்தை, மார்கோ நகரில் கோவா மாநில அரசுக்குச் சொந்தமான ரவீந்திர பவனில் காந்தியின் நினைவு தினமான இன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தை பாஜக தலைவரும், ரவீந்திர பவனின் தலைவருமான தாமோதர் நாயக் வெளியிட உள்ளார். இவ்வாறு தேச விரோதச் செயல்களுக்கு அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த விழா நடைபெற அரசு அனுமதித்தால், ரவீந்திர பவனின் உள்ளே யாரும் நுழையாதவாறு அனைத்து வாயில்களையும் அடைத்து எங்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவர். “இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும்’ என தெற்கு கோவா மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஃபடோர்டா தொகுதி எம்எல்ஏ விஜய் சர்தேசாய் உள்பட பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மோதன்தாஸ் லோலியங்கர் கூறினார்.

இதுகுறித்து எம்எல்ஏ விஜய் சர்தேசாய் கூறியதாவது:  “இந்தப் புத்தக வெளியீடானது, ஒரு கொலையை (காந்தியின் கொலை) மறைமுகமாகக் கொண்டாடும் முயற்சியாகும். மேலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், காந்தியின் நினைவு தினத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி, மக்களின் உணர்வுகளைத் தூண்டவும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதித் திட்டம் இது’ என்று விஜய் சர்தேசாய் கூறினார்.

Leave a Reply