shadow

மகாத்மா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக நாசர் நடிக்கும் ஹாலிவுட் படம்
nassar
பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் ஏற்கனவே மூன்று ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் நான்காவதாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி முதல் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 1947க்கு முன் அதாவது சுதந்திர இந்தியாவுக்கு முன் நடைபெற்ற சுதந்திர போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ஒன்று ‘The Solar Eclipse’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் தயாராகவுள்ளது.

பாலிவுட் நடிகர்களான ஓம்புரி, ரஜித் கபூர் மற்றும் ஆனந்த் மகாதேவன் ஆகியோர்கள் நடிக்கவுள்ள இந்த படத்தில் நாசர் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மகாத்மா காந்திக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரியாக நடிக்கும் நாசருக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து நாசர் கூறும்போது, “இலங்கையில் பிப்ரவரி 16முதல் ‘The Solar Eclipse’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. என்னுடைய படப்பிடிப்பு பிப்ரவரி 17 முதல் தொடங்குகிறது. இந்த படம் ஒரு தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு படம் கிடையாது. கதை நடக்கும் காலம்  சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply