நய்யாண்டி படத்தில் தனக்குப் பதில் பாடி டூப்பை பயன்படுத்தி தான் சம்பந்தப்பட்ட காட்சியை மிகவும் செக்ஸியாக எடுத்திருப்பதாக நஸ்ரியா நசீம் புகார் கூறியுள்ளார்.
நய்யாண்டியில் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். அதில் ஒரு காட்சியில் நஸ்ரியாவுக்குப் பதில் மற்றொரு டூப்பை பயன்படுத்தி மிகவும் செக்சியாக படமாக்கியுள்ளனர்.  இதை பார்ப்பவர்கள் அது நஸ்ரியா என்று நினைக்க வாய்ப்புள்ளது.  படத்தின் அக்ரிமெண்டில் இதுபோன்று எதுவும் சொல்லவில்லை. இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடிகர் சங்கத்தில் புகார் தருவேன் என சமூக வலைதளத்தில் நஸ்ரியா கூறியுள்ளார். படம் வரும் 11ம் தேதி வெளியாகயுள்ளது என்பது குறிப்பிடதக்கது. நஸ்ரியாவின் சர்ச்சை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply