shadow

நாசா வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தின் அற்புதமான படங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள வியத்தகு புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள் காணப்படுகிறது. மேலும் பல பகுதிகள் பாலைவனம் போல் காணப்படுவதாகவும், உயிரினம் வாழ்வதற்குண்டான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகம் குறித்து இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என்று அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

mars-3 mars mars1 mars2 mars4

Leave a Reply