shadow

நடிகையின் படுக்கை விளம்பரத்தால் கொந்தளிக்கும் டுவிட்டர்வாசிகள்
nargis
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை நர்கீஸ் நடித்த விளம்பர புகைப்படம் ஒன்று பாகிஸ்தான் நாட்டின் உருது பத்திரிகை ஒன்றில் முதல் பக்கத்தில் வந்துள்ளது. இதற்கு பாகிஸ்தானின் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று நர்கீஸ் புகைப்படம் நாளை சன்னிலியோன் புகைப்படமா? என அவர்கள் சமூகவலைத்தளத்தில் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னணி செய்தித் தாளான ஜாங் பத்திரிகையில் பாலிவுட் நடிகை நர்கிஸ் மொபைல் போன் விளம்பரத்தில் நடித்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் சிகப்பு நிற ஆடை அணிந்து படுத்தபடி கையில் ஒரு மொபைல் ஃபோனுடன் காட்சியளிக்கிறார் நடிகை நர்கீஸ்.

ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இது போன்ற விளம்பரப் படம் வந்திருப்பது இழிவானது, அபத்தமானது என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் தங்களது எதிர்ப்பினை டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அன்சர் அப்பாசி என்பவர் முதலில் தனது எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து மேலும் எதிர்ப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இது போன்ற புகைப்படங்கள் ப்ளேபாய் போன்ற இதழ்களின் வந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு செய்தித்தாளில் வருவது நல்லது அல்ல என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இவ்விளம்பரம் வந்திருப்பதே இந்த எதிர்ப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

English Summary: NargisFakhri‘s mobile phone ad in Pakistani newspaper sparks outrage online

Leave a Reply