shadow

மோடி அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்த மன்மோகன்சிங்

கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பிரதமர் மோடி ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் ஒருசில இதோ:

மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் வங்கிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துள்ளது. சமீபத்தில் பல மாநிலங்களிலும் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு இதற்கு உதாரணம். மேலும் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி திட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இத்திட்டங்களால் பல தொழிலாளா்கள் தங்கள் பணியை இழந்துள்ளனா்.

நிரவ்மோடி விவகாரத்தில் மோடி அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நம் நாட்டின் எந்த பிரதமரும் எதிர்க்கட்சிகளை குறித்து கருத்து தெரிவிக்க பிரதமா் அலுவலகத்தை பயன்படுத்தியதில்லை. ஆனால் மோடி தினமும் அதை செய்கிறார்். பிரதமா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கு நல்லதல்ல

Leave a Reply