தினகரன் கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்

தினகரன் கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய இரண்டே நாளில் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்துவிட்டு என்னால் பேசமுடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சி நடத்தாலம் என்று டிடிவி தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள். நான் இனிமேல் அதில் இல்லை. நான் இ்னி எந்த அரசியலிலும் இல்லை. நான் இதற்காக எதிர்வினை ஆற்றபோவதும் இல்லை. டிடிவி தினகரன் பச்சைப் படுகொலையை செய்திருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்”

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் சென்றது வருத்தம் அளிப்பதாகவும், அவரை மீண்டும் இணைத்து கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.