சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்டமான கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு நாளை வருகை தரும் லட்சக்கணக்கான பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக “நமோ டீக்கடை” தாம்பரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த டீக்கடையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயளாளர் தமிழிசை செளந்திரராஜன் இன்று மாலை திறந்து வைத்தார்.பின்னர் இன்றே இலவச டீ விநியோகிக்கப்பட்டது. நாளை பாஜக பொதுக்கூட்டம் முடியும் வரை இங்கு இலவசமாக டீ கொடுக்கப்படும் என்றும் இதற்கு தேவையான பால், டீத்தூள், சர்க்கரை போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறபடுகிறது.

நரேந்திரமோடி சிறுவயதில் டீ விற்றார் என்று காங்கிரஸார் கேலி செய்துவரும் நிலையில் அதையை சாதகமாக்கி, பாஜகவினர் நாடு முழுவதும் டீக்கடைகள் திறந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply