நளினிக்கு பரோல் நீட்டிப்பா? தமிழக அரசு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நளினி ஏற்கனவே ஒரு மாத பரோலில் வந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயாரின் கோரிக்கை மனுவை அடுத்து பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான நளினி ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாட்கள் பரோல் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.