shadow

அமெரிக்க அதிபர் டிரெம்ப் நிர்வாண சிலை ஏலம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் அவர் அதிபராவதற்கு முன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஆனவுடன் அந்த சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாதி மட்டுமே உள்ள டிரம்பின் சிலையை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஏலம் வருகிற மே 2-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் நடக்கிறது. இந்த சிலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிலையை ஏலம் எடுக்க அமெரிக்காவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல பாகங்களில் இருந்து ஏலம் எடுக்க வருவார்கள் என்று கூறப்படுகிறது

Leave a Reply