போலீசிடம் இருந்து தப்பிக்க நிர்வாணமாக குதித்த போதை மருந்து கடத்தல்காரன்

போலீசிடம் இருந்து தப்பிக்க நிர்வாணமாக குதித்த போதை மருந்து கடத்தல்காரன்

போலந்து நாட்டில் ஒரு நபர் போதை மருந்து கடத்தி விற்பனை செய்து வருவதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபர் தங்கியிருந்த வீட்டை அதிரடிப்படை சுற்றி வளைத்தது.

வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் வீட்டின் பூட்டை உடைத்த அதிரடிப்படையினர் வீட்டின் உள்ளே அந்த நபரை தேடிக்கொண்டிருந்தனர்

அப்போது திடீரென ஒரு மர்ம மனிதன் வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து நிர்வாணமாக குதித்து தப்பிக்க முயற்சித்தான். ஆனால் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்ததால் அவனால் தப்பிக்க முடியவில்லை

இந்த நிலையில் அந்த நபரை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் அவனை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த கோடிக்கணக்கான போதை மருந்துகளையும் போலீசார் கைப்பற்றினர்

Leave a Reply

Your email address will not be published.