ஜீவாவின் புதிய படத்தில் நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்தப் படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நய்யாண்டி பட விவகாரத்தில் நஸ்ரியா நடந்து கொண்ட விதம் படத்தின் தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பட வெளியீட்டுக்கு சில நாட்கள் முன்பு இந்த களேபரங்கள் நடந்ததால் படத்துக்கு அது எதிர்மறை விளம்பரமாக அமைந்தது. இத்தனைக்கும் பேசி தீர்க்கக் கூடிய சிறிய பிரச்சனை அது.

சினிமாவின் அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியையும் சம்பாதித்தார் நஸ்ரியா. அவரை வைத்து படம் எடுக்கயிருந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். முதல்கட்டமாக ஜீவா ஜோடியாக நடிக்கயிருந்த படத்திலிருந்து நஸ்ரியா நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply