shadow

நகத்தில் பிட் வைத்து தேர்வு எழுதிய பிரிட்டன் மாணவர்

பொதுவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை செய்யும்போது நன்றாக படித்து கேள்விக்குரிய பதில்களை ஃபிங்கர் டிப்ஸ்ஸில் வைத்து கொள்ள வேண்டும் என்று கூறுவதுண்டு

ஆனால் இங்கிலாந்து சேர்ந்த ஒரு மாணவர் இதை தவறாக புரிந்து கொண்டு தேர்வு எழுத செல்லும்போது பிட்டை அவரது நகங்களுக்கு இடையே மறைத்து வைத்துள்ளார்.

இயற்பியல் படிக்கும் அந்த மாணவர் நேற்று தேர்வு எழுதும்போது சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதால் அவரை ஆசிரியர் பரிசோதனை செய்தார். அப்போது அவரது நகக்கண்ணில் பிட் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தேர்வு ஹாலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave a Reply