shadow

கமல்ஹாசனுடன் நடிகை நக்மா சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கருத்துக்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று கமல்ஹாசனை நடிகையும், மகளிர் காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா சந்தித்தார்.

ஆழ்வார்ப்பேட்டை கமல் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இருவரும் தற்போதைய அரசியல் குறித்து பேசியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனை காங்கிரஸில் எப்படியும் இழுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி ரகசிய டாஸ்க் கொடுத்ததாகவும், அவர் கட்சியில் சேர்ந்தால் அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்க தயாராகவிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *