கருணாநிதியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நக்மா

கருணாநிதியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நக்மா

nagma

பிரபல நடிகையும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியுமான நக்மா பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது கூட்டணி கட்சியான கருணாநிதியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தேவைப்பட்டால் கண்டிப்பாக சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அரசியல் சார்ந்த அவசியங்கள் இருந்தால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கண்டிப்பாக அவரை சந்திப்பார்கள் என்றும் நக்மா கூறியுள்ளார்.

மேலும் குஷ்பு பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த நக்மா, ‘அது அவரது தனிப்பட்ட கருத்து. பொது சிவில் சட்டம் பற்றி கட்சித் தலைமை தெளிவாக இருக்கிறது. ‘குஷ்புவின் கருத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என தலைமையே சொல்லிவிட்டது’ என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் மிக விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தான் நம்புவதாகவும் அந்த பேட்டியில் நக்மா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.