பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நடு வழியில் திடீரென நரிக்குறவர்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

ஏற்கனவே கன்னியாகுமரியில் மீனவப் பெண் ஒருவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை என்ற காரணத்தினால் அந்த அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.