கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த கலெக்டர்!

students

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் நாகை மாவட்ட ஆட்சியரும் அருண் தம்பி ராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார்.

இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவித்துள்ளார்.