shadow

Uvari-Church-3

நாகையில் பழமையான  அந்தோணியார் தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை, கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 450 ஆண்டுகள்  பழமையான அந்தோணியார் தேவாலயம். இவ்வாலயஆண்டுத் திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை,மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்கு பின் பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட   முதன்மை பாதிரியார் செல்வன் செபாஸ்டின் மற்றும் உதவி  பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, சப்பர பவனியை துவக்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட  பெரிய சப்பரத்தில் புனித லூர்து மாதா மற்றும் அந்தோணியார் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெரிய சப்பர பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற வானவேடிக்கையிலும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply