விவேக்கின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்ய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு நன்றி என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விவேக் அவர்களின் கலை மற்றும் சமூக சேவைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் விவேக் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காலமான கலைமாமணி பத்மஸ்ரீ திரு விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் கலை மற்றும் சமூக சேவைகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச் சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply