ஆன்லைன் மதுவிற்பனைக்கும் ஆப்பு வைக்கும் சீமான்

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சமீபத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்பதும் தெரிந்ததே

டாஸ்மாக் கடைகளை மூடினாலும் ஆன்லைனில் மதுவிற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது

இந்த நிலையில் ஆன்லைன் முறையிலும் தமிழகத்தில் மது விற்பனை செய்ய கூடாது என்றும், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

நாம் தமிழர் கட்சியின் இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply