3 நாட்களில் ரூ.6 கோடி வசூல்: ஜோதிகாவின் நாச்சியார் படத்தின் அசர வைக்கும் வசூல்

3 நாட்களில் ரூ.6 கோடி வசூல்: ஜோதிகாவின் நாச்சியார் படத்தின் அசர வைக்கும் வசூல்

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘நாச்சியார்’ திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற நிலையில் இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து அனைவரையும் அசத்தியுள்ளது.

இந்த படம் சென்னையில் ரூ.1.02 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.1.57 கோடியும், கோவையில் ரூ.1.1 கோடியும், சேலத்தில் ரூ.26 லட்சமும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.21 லட்சமும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் விரைவில் ரூ.10 கோடி என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ரூ.1 கோடி ஓப்பனிங் வசூலை பெற்று வந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு படமும் அதே வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply