shadow

எனது மந்திரிசபை அமெரிக்கா போல இருக்கும். ஹிலாரி கிளிண்டன்
hilari
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபர் யார்? என்ற கேள்விதான் தற்போது அமெரிக்க மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ‘நான் அமெரிக்க அதிபராக பதவிக்கு வந்தால் எனது மந்திரிசபை அமெரிக்கா போல இருக்கும். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள் இருப்பது போல் எனது மந்திரிசபையிலும் 50 சதவீதம் பேர் பெண்கள் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

அவரது பிரசார நிர்வாகி ஜான் பொடஸ்டா, ‘இந்திய அமெரிக்கரான நீரா தாண்டனை ஹிலாரியின் மந்திரிசபையில் பார்க்க நான் விரும்புகிறேன்’ என கருத்து தெரிவித்த நிலையில், தனது மந்திரிசபையில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெறுவார்கள் என ஹிலாரி கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply