shadow

குஷ்பு தயாரித்த ‘முத்தின கத்தரிக்கா’வுக்கு ‘யூ’ சர்டிபிகேட்

sundar cசுந்தர் சி இயக்கி நடித்த ‘அரண்மனை 2’ சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவருடைய அடுத்தபடமான ‘முத்தின கத்தரிக்கா’ திரைப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து எந்தவித கட்டும் செய்யாமல் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சதீஷ், கிரண், வைபவ், விடிவி கணேஷ், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படதை சுந்தர் சியின் உதவியாளர் வெங்கட் இயக்கியுள்ளார்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *