கோட்டையில் இந்து முஸ்லீம், கிருஸ்துவ கோவில்கள் தனித்தனியாக உள்ளது. சம்புவராயர் ஆட்சியில் ஜலகண்டீஸ்வரர் ஆலயமும், திப்பு சுல்தான் ஆட்சியில் மசூதியும், கடைசியில் ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவ சர்ச்சும் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் மூன்று வழிபாட்டு தலங்களும் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளன.
இதில் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் இந்துக்களாலும் சர்ச் கிறிஸ்துவர்களால் வழிபடப்பட்டு வருகின்றன. ஆனால் மசூதியில் வழிபட முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருவதால், மாநில அரசால் எந்த முடிவும் எடுக்கமுடியாத சூழ்நிலையில் மத்திய அரசை கண்டித்து பாபர்மசூதி முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தேசிய லீக் கட்சியினர், வேலூர் சத்துவாச்சாரியில் 500க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தியும் வேலூர் தபால் நிலையம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியும், அதேபோல் வேலூர் மக்கான் அருகே சாலைமறியல் நடத்தியும் மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சாலை மறியல் செய்த முஸ்லிம்லீக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வேலூர் மக்கான் பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.