shadow

ஜெர்மன் அதிபருடன் கைகுலுக்க மறுத்த முஸ்லீம் மாணவி. பள்ளி நிர்வாகிகள் பாராட்டு

ஜெர்மன் அதிபர் Joachim Gauck என்பவர் சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பள்ளியின் பெருமை குறித்து பேசிய பின்னர் அவர் விடைபெறும்போது மாணவர்களிடம் கைகுலுக்கினார்.

அந்த சமயத்தில் மாணவர்களின் வரிசையில் நின்றிருந்த பர்தா அணிந்த ஒரு முஸ்லீம் மாணவி அதிபருக்கு கைகொடுக்காமல் தனது கையை உள்ளே இழுத்து கொண்டு ஒரு புன்னகையை மட்டும் உதிர விட்டார்.

இந்த செயலை எவ்வித அவமரியாதையாகவும் அதிபர் கருதாமல் அவரும் ஒரு புன்னகையுடன் விடைபெற்று சென்றார். இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தது.

Leave a Reply