இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் முறிவண்டி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் வழியாகச் செல்லும் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிச்சென்று இவரை வழிபட்ட பிறகே அவ்விடத்தைக் கடக்கின்றனர். அவ்வாறு செய்யாமல் போனால் வாகனம் பழுதாகி விடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஒரு காலத்தில் மாட்டு வண்டிகள் மட்டுமே இருந்தபோது இவ்விடத்தில் வணங்காமல் சென்ற வண்டிகளின் அச்சு முறிந்து விட்டனவாம். இதனாலேயே இவ்விநாயகர் முறிவண்டி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.