மும்பை வான்கடே ஸ்டேடியம்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பல சரித்திர புகழ் வாய்ந்த போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் இந்த கிரிக்கெட் மைதானத்தை கொரோனா மையமாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது

இதனை அடுத்து மும்பை கார்ப்பரேஷன் இந்த மைதானத்தில் தடுப்பு மையங்கள் எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனையை நடத்தி வருவதாகவும், இங்கு கொரோனா மையம் அமைக்கப்பட்டால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில் மும்பையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோன வார்டுகள் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply