136 இலக்கிற்கே திணறும் மும்பை: இன்று தோற்றால் வெளியே கன்பர்ம்

ஐபிஎல் தொடரில் நாற்பத்தி இரண்டாவது போட்டி பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது

இந்தநிலையில் 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மும்பை அணியும் சற்றுமுன் வரை 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது

ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அவுட் ஆகி விட்டனர்

இந்த நிலையில் இன்று தோல்வி அடைந்தால் மும்பை போட்டியில் இருந்து வெளியேற அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது