1-9ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூட உத்தரவு!

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.