12கடந்த மாதம் 26ஆம் தேதி சிந்துரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதால் 2 ஊழியர்கள் பலியானார்கள். இதற்கு பொறுப்பேற்று கப்பல் படைதளபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மும்பையில் இன்று காலை மற்றொரு கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை மாஸ்கோன் என்ற இடத்தில் கடற்படைக்காக கப்பல் கட்டும் தளம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தளத்தில் இந்திய கடற்படைக்காக கப்பல் கட்டும் பணி இன்று மும்முரமாக நடந்து வந்த போது, அந்த தளத்தில் இருந்த ஒரு கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு இந்த விபத்தில் கப்பலில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலருக்கு வாயுக்கசிவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் இந்திய கப்பல் துறை மீது அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

Leave a Reply