நர்ஸாக மாறிய மும்பை மேயர்

குவியும் வாழ்த்துக்கள்

கொரோனா வைரசால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வொர்க் பிரம் ஹோம் பணி செய்ய முடியாது என்றும் எனவே எனது பழைய தொழிலான நர்ஸ் பணிக்கு திரும்பியுள்ளேன் என்று மும்பை பெண் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நர்ஸாக இருந்த மும்பை மேயர் கிஷோரி பெட்நேக்கர் என்பவர் தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் உடனடியாக தனது முந்தைய தொழிலான நர்ஸ் தொழிலுக்கு மாறி உள்ளார்

மகாராஷ்டிராவில் இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய சேவை தன்னுடைய மாநிலத்திற்கு கண்டிப்பாக தேவை என்று அவர் நர்ஸாக களம் இறங்கி உள்ளார்

அவர் தற்போது நர்ஸ் பணியில் ஈடுபட்டு வருவதை புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.