shadow

ஹிட்லர் ஆட்சி போல் மாறுகிறது மோடி ஆட்சி. மும்பை பெண் மேயர் அதிர்ச்சி கருத்து

modiஉலகிலேயே கொடுமையான சர்வாதிகாரியாக விமர்சனம் செய்யப்பட்ட ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு மும்பை பெண் மேயர் ஒருவர் பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை நகரின் மேயரும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவருமான ஸ்நேகல் அம்பேத்கர், சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

மோடியின் சுயசார்பு, செயல்படும் விதம் ஆகியவற்றுக்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

அதிகாரங்கள் ஒரு நபரிடம் குவிந்திருக்கும்போது, கட்டாயம் இவ்வாறு நடக்கும் அபாயம் உள்ளதாக கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ள போதிலும் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை அவர் அடிக்கடி கூறிவருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

மும்பையின் 7-வது மேயராக பதவியேற்றுள்ள ஸ்நேகல் அம்பேத்கர், ஒரு தலித் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சி மேயராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்நேகல், இதற்கு முன் எல்ஐசி அதிகாரியாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.ல்

Leave a Reply