எலக்ட்ரிக் பில் கட்டிய வழக்கறிஞரிடம் ஆன்லைன் மோசடி: ரூ.2.38 லட்சம் நஷ்டம்

எலக்ட்ரிக் பில் கட்டிய வழக்கறிஞரிடம் ஆன்லைன் மோசடி: ரூ.2.38 லட்சம் நஷ்டம்

ஆன்லைனில் எலக்ட்ரிக் பில் கட்டிய வழக்கறிஞர் ஒருவரிடம் 2.38 லட்சம் மோசடி செய்து இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டின் எலக்ட்ரிக் பில்லை ஆன்லைனில் கட்டினார்

அப்போது அவரது மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதனை அடுத்து போன் செய்த ஒரு பெண் அந்த மெசேஜில் உள்ள நம்பரை கூறுமாறு தெரிவித்துள்ளார்

எலக்ட்ரிக் துறையில் இருந்துதான் பேசுவதாக நினைத்துக்கொண்டு அந்த நம்பரை வழக்கறிஞர் பகிர்ந்த நிலையில் உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து 2.38 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது