அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் மும்பை அழகிகள் நடனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இந்நிலையில் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவில் பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு மும்பை நடன கலைஞர்கள் நடனம் ஆடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடன இயக்குனர் சுரேஷ் முகுந்த் மற்றும் அவரது உதவியாளர் கார்த்திக் பிரியதர்ஷன் இணைந்து இந்த நடன நிகழ்ச்சியில் 30 நடன கலைஞர்கள் நடனம் ஆடவுள்ளதாகவும், அவர்கள் கடந்த 3 நாட்களாக கடுமையான நடன பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் நடன இயக்குனர் சுரேஷ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் லானில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய அழகி மானஸ்வி மம்கை நடனத்தை துவங்கி வைப்பார் என்றும் அவரை தொடர்ந்து மற்ற நடனக்கலைஞர்கள் நடனம் ஆடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.