மும்பை மலபார்ல் கேம்ப்ஸ் கார்னர் பகுதியில் மவுண்ட் பிளாங் என்ற 26 மாடி கட்டிடத்தில் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் 12-மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீ பிடித்தது. இதனால் உயிருக்கு பயந்து குடியிருப்பில் வசிக்கும் இந்திப்பட அதிபர் தினேஷ் காந்தி, அவரது மனைவி மற்றும் பலர் மேல் மாடிக்கு அலறி அடித்து ஓடினர். அங்கு இருந்து அவர்கள் அபயக்குரல் கொடுத்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைக்கும் வீரர்கள் விரைந்து வந்து தீயை 4 மணி நேரம் போராடி நள்ளிரவு 12 மணி அளவில் தீயை அணைத்தனர். அதன் பிறகு ஒவ்வொரு அறையாக சென்று தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது, 7 பேர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல் முழுவதும் கருகி இருந்ததால் இறந்தவர்களை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று காலை மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது. அவர்களில் இந்திப் பட அதிபர் தினேஷ் வசந்த் காந்தி, அவரது மனைவி தேவயானி காந்தி உள்பட பலியான 7 பேர் அடையாளம் தெரிந்தது.

Leave a Reply