சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

புதிய தலைமை செயலகத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடை இல்லை என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவமனையில்புற்றுநோய் அறுவைச் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை அறை, கதிர்வீச்சு புற்றுநோய் புறநோயாளிகள் பிரிவு, அவசர அறுவைச் சிகிச்சை அரங்கு, ரத்த நாள அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ரத்த வங்கி, பொது ஆய்வகம், நிர்வாகத் துறை பிரிவுகள், இயக்குநர் அலுவலகம் ஆகியவை இரண்டாம் தளத்திலும், இதயவியல், நெஞ்சகம், புற்றுநோய் அறுவைச் சிகிச்சைகளின் உள்நோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் புற்று நோயாளிகள் உட்பிரிவு, உணவகம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை, நரம்பியல் பிரிவு, நுண் அறுவை பிரிவும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கை, கால் சீரமைப்பு தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, சிறப்பு அறுவை அரங்க பகுதியும் அமைந்துள்ளன.

மேல் தளமான ஆறாவது தளத்தில், தீவிர சிகிச்சை பிரிவு, மயக்கத்துக்குப்பின் தீவிர சிகிச்சை பிரிவு, தொடர் கண்காணிப்பு அறைகள், ரத்த நாள ஆய்வகம், தனி சிறப்பு அறுவை அரங்குகள் ஆகியவை அமைந்துள்ளன.

Leave a Reply