ரஜினி,கமலை இணைக்கும் பிரபல தயாரிப்பாளர்: அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமா?

ரஜினி கமலை இணைக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்:அரசியல்வாதிகள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன இருப்பினும் இந்த செய்திகள் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு மேடைகளில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து பங்கேற்ற நிலையில் மீண்டும் ஒரு விழாவில் இருவரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் 60வது ஆண்டு விழா டிசம்பர் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருக்கும் விழாக்குழுவினர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் இருவருமே இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் எந்த விழாவில் பேசினாலும் அவர் பேசியதை வைத்து திரித்துக் கூறி அதற்கு பதிலடி கொடுத்து விமர்சனம் செய்து வரும் அரசியல்வாதிகளுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதனால் அவர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply